முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டிவிட்டரில் புளூடிக்கை இழந்த சிவசேனா கட்சி – இணைய சேவையும் நிறுத்தம்

உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவ சேனா கட்சி தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர், யூடியூப் உள்ளிட்ட கணக்குகளில்  பெயரை மாற்றியதால் வெரிஃபைடு புளூடிக்கை இழந்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி ஆகியவை  இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் தனது கட்சிக்கு எதிராக திரும்பினார். சில எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து  கூட்டனி அமைத்து பாரதிய ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்  ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு  சிவ சேனா கட்சியின் பெயரையும் வில், அம்பு சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களிடம் இது குறித்து பேசியபோது ”வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியதுள்ளது. திருடன் பிடிபட்டுவிட்டான். நான் அந்த திருடனுக்கு சவால் விடுகிறேன். அந்த திருடன் வில் அம்புடன் களத்துக்கு வரும் போது பதிலடி கொடுப்போம். அவர்களுக்கு பால் தாக்கரேவின் முகம் தேவைப்படுகிறது, வில் அம்பு சின்னம் தேவைப்படுகிறது. ஆனால் சிவ சேனாவின் குடும்பம் தேவைப்படவில்லை” என ஆவேசமாக பேசினார்.

இதனையும் படியுங்கள் : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 15 பேர் உயிரிழப்பு

தேர்தல் ஆணையம் ஷிண்டேவிற்கு கட்சியின் அங்கீகாரம் வழங்கியதால் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின்  அதிகாரப்பூர்வமான முகநூல், டிவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களின் பெயரை சிவசேனா (Shiv Sena) என்பதிலிருந்து சிவ சேனா உத்தவ் பால்சாஹிப் தாக்கரே (Shiv Sena UBT) என மாற்றியுள்ளது. இந்த கணக்குகள் அதிகாரப்பூர்வமான கட்சியின் கணக்காக அங்கீகரிக்கப்பட்டு ஏற்கனவே  புளூடிக் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது பெயர் மாற்றப்பட்டதால் டிவிட்டரில் புளூடிக் நீக்கப்பட்டது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி ”தேர்தல் ஆணையத்தின் முடிவால்  கட்சியின் பெயர் குறித்து குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பெயரை மாற்றியுள்ளோம்” என தெரிவித்துள்ளது. மேலும் புளூடிக்கிற்காக மீண்டும் சரிபார்ப்பதற்கான கோரிக்கையை டிவிட்டர் நிறுவனத்திற்கு வைத்துள்ளோம் என தெரிவித்தனர்.

அதேபோல சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வமான இணைய தளமும் கடந்த சனிக் கிழமை முதல் வேலை செய்யவில்லை. இணையதளத்தின் டொமைனை மாற்றுவதற்கான பணிகள் நடைபெறுகிறது விரைவில் சரி செய்யப்படும் என சிவ சேனா கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிவகார்த்திகேயனுடன் ஏன் காய் விட்டார் அருண் விஜய்?

Vel Prasanth

கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி!

Halley Karthik

தாறுமாறாக ஓடிய சொகுசு கார்; விபத்தில் ஒருவர் பலி

Halley Karthik