சென்னையில் நான்கு வாக்கு எண்ணும் மையங்களில் 3000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் நாளை எண்ணப்படுகின்றன. இந்த மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட இந்த நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாள் என்பதால் ஊரடங்கு கண்காணிப்பில் 7000 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.