ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?

இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது. சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி…

இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது.

சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி உருவெடுத்துள்ளது. கடந்த இரு தினங்களாக தென் இந்தியாவில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது சவர்மா. இதற்கு காரணம், கேரள மாநிலம் காசர்கோடு அருகே சவர்மா சாப்பிட்டதால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம்தான்.

இதனையடுத்து கேரளாவின் மற்றொரு பகுதியில் இன்னும் சிலர் ஷவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திகளும் வெளியகின. இந்நிலையில், சவர்மாவில் என்ன இருக்கிறது, இளைஞர்களின் Favourite உணவாக இருந்து வரும் சவர்மாவா ஆரோக்கியத்திற்கு நல்லதா? சவர்மா சாப்பிட்டால் என்னென்ன கெடுதல் ஏற்படும் என்பதை இந்த செய்தியில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

சவர்மாவால் ஏற்படும் பாதிப்புகள்:

  • சவர்மாவில் கொழுப்புச்சத்து மற்றும் சர்க்கரை அதிகளவில் இருப்பதால் இளைஞர்களுகளின் ஞாபக சக்தி பெரிதும் பாதிக்கப்படும்.
  • சவர்மாவை அதிகம் உட்கொண்டால், முதலில் பெரிதும் தெரியவில்லை என்றாலும் நாளடைவில் எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும்.
  • சவர்மாவில் சேர்க்கப்படும் இறைச்சியில் அதிக அளவு கலோரிகள் (Calories) இருப்பதனால் சோம்பலும் உடல் இடையும் வெகுவாக அதிகரிக்கும்.
  • அடிக்கடி சவர்மா சாப்பிடுவதனால், உடலுக்கு கெடுதல் மட்டுமல்லாமல் நமது சருமம் கலையிழக்கும்.
  • சவர்மாவை உட்கொண்டால் சிறுவர்களின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
  • சவர்மா அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்னைகள் கண்டிப்பாக வரும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.