இந்திய கிரிக்கெட் அணி ஜும்பாம்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினார். ஜும்பாம்வே அணி சார்பில் பிளெஸ்ஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.




