டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், போராட்டங்களின் தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் டெல்லியில் உள்ள காந்தி சமாதிக்கு செல்ல உள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன.
முன்னதாக டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்திலிருந்து பேருந்து மூலம் காந்தி நினைவிடத்திற்கு எதிர்கட்சி தலைவர்கள் புறப்பட்டனர். முதலில் அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் மற்றும் காவல் வாகனங்கள் மூலம் சிறிது நேரம் தடுத்தனர். பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காந்தி சமாதிக்கு வந்தடைந்த ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் அங்கு அஞ்சலி செலுத்தினர்.




