ShareChat-ல் 3 லட்சம் Followersகளை கடந்த முதல் செய்தி சேனல் என்ற பெருமையை பெற்றுள்ளது நியூஸ்7 தமிழ்.
தமிழக ஊடக பரப்பில் மடை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது நமது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி. தொடர்ந்து வெற்றிநடை போட்டு இன்னும் ஒரு மாதத்தில் 9ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அத்துடன், கடந்த பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நியூஸ்7 தமிழ் ப்ரைம், பக்தி, அக்ரி, ஹெல்த் என யூட்யூப் சேனல்கள் மூலமாகவும் சேவை புரிந்து வருகிறோம். தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிகளில் 20 லட்சம் ஃபாலோவர்களுடன் ட்விட்டரில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அதேபோல, பேஸ்புக்கில் 30 லட்சம், இன்ஸ்டாகிராமில் 14 லட்சம் பாஃலோவர்களும் உள்ளனர். அந்த வகையில் ஷேர் சேட் சமூக ஊடகத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் தொலைக்காட்சியாக நியூஸ்7 தமிழ் 3 லட்சம் ஃபாலோவர்களை கடந்துள்ளது.
இந்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாக நியூஸ்7 தமிழுக்கு சில்வர் டிராபி வழங்கிய கவுரவித்துள்ளது ஷேர் சேட் நிறுவனம். சென்னையிலுள்ள நியூஸ்7 தமிழ் அலுவலகத்திற்கு வந்த ஷேர் சேட் நிர்வாகத்தினர், நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல், டிஜிட்டல் பிரிவு தலைவர் சுகிதா சாரங்கராஜ் ஆகியோரிடம் சில்வர் டிராபியை ஒப்படைத்தனர்.
நியூஸ் 7 தமிழ் ஷேர் சேட் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்ய:
https://sharechat.com/profile/news7tamil