முக்கியச் செய்திகள் விளையாட்டு

மஹமத்துல்லா விளாசல்.. பங்களாதேஷ் அணி 181 ரன்கள் குவிப்பு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி 181 ரன்கள் குவித்துள்ளது.

ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. இலங்கை, பங்களாதேஷ், ஓமன் என எட்டு அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்று வருகின்றன. இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 9வது போட்டியில் பங்களாதேஷ் அணியும் பப்புவா நியூ கினியா அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் கேப்டன் மஹமத்துல்லா 28 பந்துகளில் 3சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஷகிப் அல் ஹசன், 37 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பப்புவா நியூ கினியா அணி பேட்டிங்கை தொடங்கி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Halley karthi

திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

Jayapriya

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்: எஸ்.பி.வேலுமணி கோரிக்கையையடுத்து முதல்வர் அறிவிப்பு!

Halley karthi