பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.
பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழப்பு யை அடுத்து இந்த விசாரணை தீவிரமானது. போதைப் பொருள் வழக்கில் நடிகை சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில், நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங்,சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
கர்நாடகாவில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவிவேதி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகை அனன்யா பாண்டேவுக்கும் போதைத் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து நடிகை அனன்யா பாண்டே, தனது தந்தையும் நடிகருமான சங்கி பாண்டேயுடன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு அதிகாரிகள் அனன்யாவிடன் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
https://twitter.com/ANI/status/1451135310134317063
நடிகை அனன்யா பாண்டே, இப்போது விஜய தேவரகொண்டா ஜோடியாக ’லைகர்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. புரி ஜெகந்நாத் இயக்குகிறார்.








