பிரபல நடிகை ஷகிலா, தனது உடல்நிலை குறித்து வந்த தவறான செய்தியை மறுத்துள் ளார். தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டவர், நடிகை ஷகிலா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஷகிலாவின் வாழ்க்கை கதை கடந்த வருடம் சினிமாவாக வெளியானது. ஷகிலா கேரக்டரில் இந்தி நடிகை ரிச்சா சட்டா நடித்திருந்தார். கன்னட பட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருந்த இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
தனியார் சேனலில் ஒளிப்பரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவரை ரசிகர்கள் பார்க்கும் பாரவை மாறியிருக்கிறது.
https://twitter.com/rameshlaus/status/1420730453061824517
இந்நிலையில் நடிகை ஷகிலாவின் உடல்நிலை குறித்து நேற்று பரபரப்பு செய்தி வெளியா னது. இதுகுறித்து, வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ள ஷகிலா, தான் நன்றாக இருப்ப தாகத் தெரிவித்துள்ளார்.
’நான் உயிரிழந்துவிட்டதாக கேள்விபட்டேன். அப்படி ஏதுமில்லை. நான் ஆரோக்கிய மாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். யாரோ என்னைப் பற்றி வதந்தியை பரப்பியதால் எனக்கு நிறைய போன் கால்களும் மெசேஜ்களும் வந்தன. அனைவரின் அன்புக்கும் நன்றி. ரசிகர்களை என்னை பற்றி மீண்டும் சிந்திக்க வைத்ததால், வதந்தியை பரப்பியவருக்கும் நன்றி’எனக் கூறியுள்ளார்.







