அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 100 டாலர் ஊக்கத் தொகை

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு 100 டாலர் ஊக்கத் தொகை வழங்கலாம் என்று மாநிலங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் 28ம் தேதி காலை…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு 100 டாலர் ஊக்கத் தொகை வழங்கலாம் என்று மாநிலங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் 28ம் தேதி காலை நிலவரப்படி 1,63,588 பேர் இரண்டு தடுப்பூசியும் போட்டிருக்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 49.3 சதவீதம் ஆகும். அந்த நாட்டின் 21 மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

30 மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் 40 சதவீதத்துக்கும் குறைவான மக்கள்தான் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பானது அண்மையில், சில சூழல்களில் மீண்டும் முக க்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியிருப்பதாவது;
“மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உதவி நிதியில் இருந்து முழுமையாக இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட மக்களுக்கு ஊக்கத் தொகை வழங்கலாம் . எந்த வித பிரச்னையும் இல்லாமல் அல்லது புதிய சவால்கள் இல்லாத நிலையில் இது ஒரு எளிமையான நேரான வழி. ஆனால், இதுவே உண்மையான வாழ்க்கை அல்ல.

மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு தடுப்பூசிகள் போட வேண்டும் அல்லது முக க்கவசம் அணிய வேண்டும், தொடர்ந்து கொரோனா தொற்று தடுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். விரைவில் நமது வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று நாம் எல்லோரும் கருதுகின்றோம். முழுவதுமாக நாம் தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் அது சாத்தியமாகும்.” இவ்வாறு ஜோபைடன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.