ஷாருக்கான் ‘Dunki’ படத்தின் புதிய அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ஒரு புதிய படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘Dunki’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது.
இந்நிலையில், ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ படங்களில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் இப்போது ‘Dunki’ படத்தின் அப்டேடுடன் இணையத்தில் வைரலாகி வருகிறர். அந்த வகையில், இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே சலசலப்பு நிலவி வருகிறது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல விமர்சகர் சுமித் காடெல் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். படத்தின் முதல் போஸ்டரைப் பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும். இதில் ஷாருக்கான் ராணுவ வீரராக நடித்துள்ளார். ‘ஒரு ராணுவ வீரன் தன் வாக்குறுதியை மறப்பதில்லை..’ என்று பதிவின் மேலே எழுதப்பட்டிருக்கிறது.







