‛துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? -கௌதம்மேனன் கொடுத்த மாஸ் அப்டேட்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ட்ரெய்லர், யூடியூபில் வரும் 24ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் ‘லியோ’ வெளியான திரையரங்குகளில்…

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ட்ரெய்லர், யூடியூபில் வரும் 24ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் ‘லியோ’ வெளியான திரையரங்குகளில் தற்போது பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைத்துள்ளார். சென்சாரில் யுஏ சான்றிதழ் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த  நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின்னர் இந்த படம் ரிலீசாக உள்ளதை அடுத்து தீபாவளி படங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.