சென்னையில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவை, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான் சந்தித்து பேசினார்.
அண்மையில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. குறிப்பாக உலக அளவில் கவனம் ஈர்த்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்த பாகுபலி, கேஜிஎஃப்-2 ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. அப்பேற்பட்ட இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜவான் படத்தின் தயாரிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘பதான்’ திரைப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருந்து நேற்று சென்னை வந்துள்ளார்.
இதனையும் படியுங்கள்: வசூலில் புதிய சாதனை படைத்த `பதான்’
சென்னை வந்த அவர், தன்னுடன் கதாநாயகியாக நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இல்லத்திற்கு சென்றார். ஷாருக்கான் வருவதை அறிந்த, நயன்தாரா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மற்ற குடியிருப்புவாசிகள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நயன்தாராவை சந்தித்த நடிகர் ஷாருக்கான் சிறிது நேரம் அவரது வீட்டில் இருந்து, அவருடன் பேசிவிட்டு, விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளையும் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர் தனது வீட்டில் இருந்து கிளம்பிய நடிகர் ஷாருக்கானை, நயன்தாரா அவரது கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார். ஷாருக்கான் காரில் ஏறுவதற்கு முன்பாக அங்கிருந்த எல்லோருக்கும் முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Scenes of #SRK from Chennai when he visited #Nayanthara last evening. 🖤✨@iamsrk @yrf #pathaan #ShahRukhKhan #jawan #Pathaan900crWorldwide #DeepikaPadukone #JohnAbraham pic.twitter.com/G2wlVW9YTY
— SRK Jawans (@SrkJawans) February 12, 2023
ஏற்கனவே விக்னேஷ் சிவன் விரைவில் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் ஷாருக்கான், நயன்தாரா சந்திப்பு அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே போல் கடந்த மாதம் ஜனவரி 31-ஆம் தேதி இயக்குநர் அட்லி-பிரியா தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தையை, அட்லியின் வீட்டிற்கு நேரில் சென்று ஷாருக்கான் பார்த்துவிட்டு வந்து, அதுகுறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா