பிப்ரவரி மாதம் என்றதுமே காதலர் தினம் தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். காதலர்களுக்கான கொண்டாட்டங்கள் பிப்ரவரி 7ம் தேதி முதலே தொடங்கும். பிப்ரவரி 7ம் தேதி ரோஸ் டே என ஆரம்பித்து ப்ரொப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே ஹக் டே, கிஸ் டே என ஒரு வாரமாக கொண்டாட்டங்கள் நடைபெறும்.
நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காதலர் தினத்திற்கு முந்தைய நாளான இன்று கிஸ் டே கொண்டாடப்படுகிறது.
முத்தம் என்பது உணர்வுகளை வெளிப்பாடாகும். முத்தத்தில் பல வித முத்தங்கள் இருக்கின்றன. முத்தத்தில் நூறு வகைகள் உள்ளன, ஒவ்வொரு முத்தமும் ஒவ்வொரு வகையான உணர்வை தரக்கூடியது. முத்தம் என்றதும், “மகள்களை பெற்ற அப்பாகளுக்கே தெரியும் முத்தம் காமத்தை சார்ந்தது அல்ல” என்ற பிரபல திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வரும்.
காதலன், காதலி இடையே ஒட்டுமொத்த அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் ஒன்றாக முத்தம் இருக்கும். கிஸ் டேயில் முத்தத்தில் உள்ள வகைகள் குறித்து பார்க்கலாம்.
நெற்றியில் முத்தம்
ஒரு காதலனோ, காதலியோ தனது அன்பானவருக்கு நெற்றியில் முத்தமிடுவது அம்மாவை போன்று பாசத்தையும், அக்கறையையும் காட்டுவதாகும்.
மூக்கில் முத்தம்
மூக்கில் முத்தமிடுவது காதலன்/ காதலி மிகவும் அழகாய் இருக்கிறாய் என்பதை சொல்லும் விதமாக கொடுப்பதாம். இது ரொமாண்டிக்கான ஒரு விஷயமாகவும் இருக்கிறதாம்.
உதட்டில் முத்தம்
காதலன்/காதலி உதட்டில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை அவரின் உயிருக்கும் மேலாக விரும்புவதாக அர்த்தமாம்.
காதலன் காதலிக்கு அவரின் கைகளில் முத்தமிட்டால் அவரை மிகவும் நேசிப்பதாகவும், மதிப்பதாகவும் அர்த்தம்.
கழுத்தில் முத்தம்
காதலன் காதலியிடையே கூடலின் போது பின்னால் இருந்து அணைத்து கழுத்தில் முத்தமிடுவது மிகவும் ரொமாண்டிக்கான முத்தமாக பார்க்கப்படுகிறது.
விரல்களில் முத்தம்
ஒவ்வொரு விரலாய் முத்தமிடுவது என்பது என் உலகமே நீதான் என்று சொல்லாமல் சொல்வதாகும்.
கண்களில் முத்தம்
காதலன், காதலி கண்களில் முத்தமிடுவது உன்னை என் கண்ணுக்குள் வைத்து காலம் முழுவதும் பார்த்துக் கொள்வேன். தனது துணையின் முக்கியத்துவத்தை இந்த முத்தம் கூறுவதாய் அமையும்.
கன்னத்தில் முத்தம்
கன்னத்தில் முத்தம் கொடுப்பது என்பது பொதுவாக உங்க துணை நட்பாக இருக்கவும் பாசத்தை வெளிப்படுத்துவதையும் குறிக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு முத்தத்திற்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் உள்ளது.









