‘பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல’: பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்

மல்யுத்த வீராங்கணைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், “பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல” என்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக…

மல்யுத்த வீராங்கணைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், “பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல” என்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பியும், பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் பிரிஜ் பூஷன் மீது 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவர் உட்பட 7 வீராங்கனைகள் பாலியில் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடியாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் மழுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் வீரர்களின் ஆதரவளித்தன.

இதனையடுத்து, பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் 15-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலையில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கியதோடு, அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தடை விதித்தது. மேலும் புகார் தெரிவித்தவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டக் கூடாது எனவும் மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் கடந்த புதைக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது “பாலியல் நோக்கமின்றி பெண்ணை கட்டி பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல. மல்யுத்தத்தில் ஆண் பயிற்சியாளர்கள் அதிகம். வீராங்கனைகளுக்கு பயிற்சி கொடுப்பதும் அவர்கள் தான். அதனால் ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சியின் போது வீராங்கனைகளை தழுவி பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கும். இந்த விளையாட்டில் இது வெகு இயல்பான ஒன்றுதான்.

இந்த குற்றசாட்டுகள் 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் நடந்தது என சொல்லி தற்போது 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது கர்நாடகத்தின் பெல்லாரி மற்றும் லக்னோவில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை டெல்லியில் விசாரிக்கக் கூடாது” என பிரிஜ் பூஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் மோகன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.