சென்னை தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி,டி,சி குடியிருப்பு பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை ராஜேஷ், ஏழுமலை ஆகிய இருவர் மேற்கொண்டுள்ளனர். அப்போது, கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவலறித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: