நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸை படக்குழுவினர் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவலின் காரணமாக, படக்குழு படத்தினை பிப்ரவரி இறுதியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்தும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சமீபத்தில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு படக்குழுவினர் படத்தினை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர், வலிமை, ராதே ஷ்யாம் உள்ளிட்டப் படங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.