முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு 297 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 296 ரன்கள் சேர்த்து தனது ஆட்டத்தை நிறைவு செய்தது. 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டீ காக், ஜேன்மென் மாலன் உள்ளிட்டோர் களமிறங்கினர். இவர்களில் மாலன் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். தேம்பா பாவுமா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். இதனிடையே டீ காக் 27 ரன்னிலூம் ஐடன் மார்க்ராம் 4 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். ரஸ்ஸி வான் டெர் டுசென் கேப்டன் தேம்பா பாவுமாவுடன் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை நாளா புறமும் சிதறடித்தனர். 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்த்திருந்தது.

 

Advertisement:
SHARE

Related posts

டெங்கு தடுப்பு நடவடிக்கை; 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு

Arivazhagan CM

தமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

Halley Karthik

உறவினர்களை தாக்கிய ஆயுதப்படை காவலர் மீது புகார்

Saravana Kumar