சேது சமுத்திரத் திட்டம்- ஒரு சிறப்பு பார்வை

சேது சமுத்திரத் திட்டமும் அதும் அதன் நோக்கத்தையும் அது கடந்து வந்த பாததையையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.  சேது சமுத்திரத் திட்டம் முதன் முறையாக 1850 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில்…

சேது சமுத்திரத் திட்டமும் அதும் அதன் நோக்கத்தையும் அது கடந்து வந்த பாததையையும் இந்த தொகுப்பில் பார்ப்போம். 

சேது சமுத்திரத் திட்டம் முதன் முறையாக 1850 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அதன் பிறகு 1955-ல் டாக்டர்.ஏ.ராமசாமி முதலியார் தலைமையிலான குழு, 1964ஆம் ஆண்டில் டாக்டர் நாகேந்திர சிங் தலைமையிலான உயர்நிலைக் குழுவால் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தின் சாத்தியக் கூறு ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய் மதிப்பில் சேது சமுத்திர திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாக காந்தி முன்னிலையில் 2005ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி சேது சமுத்திரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டத்தின் வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக கூறி வழக்குத் தொடரப்பட்டதால் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பன்னாட்டுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலிலிருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். பன்னாட்டுக் கப்பல் போக்குவரத்து மூலம் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காணும் என இந்த திட்டத்தை ஆதரிப்போர் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.