சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக இருந்து சுற்றுச்சூழலை பாதுகாத்து, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவுச் செய்து பசுமை பெண்ணாகத் திகழ்ந்து மற்றப் பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார் சிறந்த சமூக சேவைக் காண விருதைப் பெற்ற “செல்வி”.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வருபவர் செல்வி. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார. சமூக அக்கறை என்ற பெயரில் மரங்களை மட்டும் நட்டு வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் பல அமைப்பினருக்கு மத்தியில் இவர் ஒருவர் மட்டுமே மரங்களை நடுவது மட்டுமல்லாமல் அதற்கு வேலி அமைத்து அதற்கான ஆட்களையும் நியமித்து மரங்களை பராமரித்து வருகிறார். மேலும, இவர் நகர மன்ற உறுப்பினராகவும் இருந்து மக்களுக்கு பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாக ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி மாவட்டம் தான் மழை பொழிவது என்பது அரிது அப்படி இருக்கும் சூழ்நிலையில் பரமக்குடியைச் சுற்றி நிறையக் கருவேல மரங்கள் சூழ்ந்தப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடத்தத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகங்கள் நெடுஞ்சாலை ஓரம், ஆற்றுப்படுகைகள், சர்வீஸ் சாலை, அரசு பொது மருத்துவமனை என இவரது கண் பார்வைப் படும் திசை முழுவதும் மரக்கன்றுகளை நடத்துவங்கினார். ஐந்து வருடங்களாகத் தொடங்கியப் பணியில் தற்போது முப்பதாயிரம் மரக்கன்றுகள் வரை நட்டு உள்ளார். இந்த செடிகள் பெரிய மரங்களாகவும் பசுமையாகவும் காட்சியளிக்கிறது. இதில் நாவல் மரம், ஆல மரம், தேக்கு மரம், பூவரசம், இலுப்பை மரம், கருங்காலி மரம், பனை மரம், புங்க மரம், பலா மரம், மாமரம் என பலவகையான மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். இவர் நட்டு வைத்த மரங்கள் தற்போது வெயில் காலங்களில் பொதுமக்களுக்கு நிழலாகவும் பசுமையாகவும் காணப்படுகிறது.
இவரது இலக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என தெரிவித்து வருகிறார் இந்த இலக்கை இன்னும் ஒரு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன் எனவும் உறுதியளித்து வருகிறார். மரங்கள் நடுவது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளை சீர் செய்வது, நூலக வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, கிராமங்களுக்குத் தேவையானவற்றைச் செய்வது தன்னைச் சுற்றி உள்ள மகளிர் அமைப்புகள் ஆதரவற்றோர்களுக்கு விசேஷக் காலங்களில் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார்.
உதயம் பவுண்டேஷன் என்ற அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம் கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஆதவற்றோர்கள் மற்றும் சாலையில் சுற்றித் திாிபவர்களுக்குத் தினந்தோறும் இலவசமாக உணவுகளும் வழங்கி வந்தநிலையில், தற்போதுக்கூட அரசு மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் தங்குவதற்கான தங்கும் விடுதி ஒன்றை அமைத்து ,அதில் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று வருகிறார்.சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக போராடிய செல்விக்கு பரமக்குடி நகராட்சி சிறந்த சமூகச் சேவைக் காண விருதையும் வழங்கி கௌரவித்தது.
-கா.ரூபி