சென்னையில் தொடர் திருட்டு: சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த மர்ம நபர்கள்

சென்னை, உள்ளகரத்தில் மர்மநபர்கள் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.  சென்னை மடிப்பாக்கம், ராம் நகர், உள்ளகரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவை திருடுபோவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.…

சென்னை, உள்ளகரத்தில் மர்மநபர்கள் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

சென்னை மடிப்பாக்கம், ராம் நகர், உள்ளகரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர
வாகனம், சைக்கிள் ஆகியவை திருடுபோவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் சில இளைஞர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை
நோட்டமிட்டுச் செல்வதாகவும், நேற்று முன்தினம் இரவு கூட மர்ம நபர்கள்
முடிந்தால் பிடித்துப் பாருங்கள் என சவால்விடும் வகையில் சிசிடிவி கேமரா
அருகில் வந்து முகத்தைக் காட்டிவிட்டு முத்தம் கொடுத்துவிட்டுச் செல்வதாகவும் சிசிடிவி காட்சியோடு உள்ளகரம் ஊர் மக்கள் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், இதுவரை சி.எஸ்.ஆர். கூட கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் இந்த மர்ம நபர்களை போலீஸார் விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.