வங்கிகள் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டது-மத்திய நிதி அமைச்சகம் பதில்

வங்கிகள் மீது பெறப்படும் புகார்கள் ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக விசாரித்து முடித்து வைக்கப்பட்டுவிட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. வங்கிகளுக்கு எதிரான புகார்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதா? பொதுத் துறை மற்றும்…

வங்கிகள் மீது பெறப்படும் புகார்கள் ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக விசாரித்து முடித்து வைக்கப்பட்டுவிட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

வங்கிகளுக்கு எதிரான புகார்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதா? பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளின் மீது பெறப்பட்ட புகார்கள் தொடர்பாகவும் அதன் மீது நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் துறை இணை பகவத் கரத் கூறியதாவது:

ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி 2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2020 மார்ச் 31ம் தேதி வரை வங்கிகளின் மீது 2,62,004 புகார்கள் பெறப்பட்டதில் அனைத்து புகார்களும் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2020-2021ம் நிதி ஆண்டில் 3,01,277 புகார்கள் பெறப்பட்டு அனைத்து புகார்களும் விசாரித்து முடித்து வைக்கப்பட்டது. மேலும், 2021-2022 நிதி ஆண்டில் 2,41,242 புகார்கள் பெறப்பட்டதில் அனைத்து புகார்களும் முடித்து வைக்கப்பட்டதாகவும் 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை 51,447 புகார்கள் பெறப்பட்ட நிலையில் 37,640 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களில் பெரும்பாலும் ஏடிஎம் சேவைகள், கிரெடிட் கார்டுகள் தொடர்பான சிக்கல்கள் தொடர்பான புகார்கள் , ஆன்லைன் வங்கி சேவைகள், கடமைகளை நிறைவேற்றத் தவறியது, முன் அறிவிப்பு இல்லாமல் கட்டணம் வசூலிப்பது, கடன்கள் மற்றும் முன்பணங்கள், டெபாசிட் கணக்குகள் மற்றும் ஓய்வூதியக் பணபரிவர்த்தனை தொடர்பான பிரச்சனைகளை அதிகம் இருந்ததாகவும் மத்திய அரசின் எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.