2டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு : பாடலாசிரியர் சினேகன் விளக்கம்

மதுரையில் நடைபெற்ற விருமன் பட நிகழ்ச்சியில் பாடலாசிரியர்கள் அழைக்கப்படவில்லை என கூறியது அன்பின் மிகுதியால் கூறிய கருத்து என சினேகன் விளக்கமளித்துள்ளார்.   கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை…

மதுரையில் நடைபெற்ற விருமன் பட நிகழ்ச்சியில் பாடலாசிரியர்கள் அழைக்கப்படவில்லை என கூறியது அன்பின் மிகுதியால் கூறிய கருத்து என சினேகன் விளக்கமளித்துள்ளார்.

 

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி,
நடிகை அதிதி, இயக்குனர் முத்தையா, ராஜ் கிரண் மற்றும் சூரி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் சினேகன், மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு பாடலாசிரியர்கள் அழைக்கவில்லை என்று சொல்லி இருந்தேன் அது பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது என்றார்.

 

அன்பின் மிகுதியால் தான் அப்படி சொன்னேன் வேறு எதுவும் இல்லை என்ற அவர், சம்பளம் கூட காணாமல் போய் விடும். ஆனால் அந்த அங்கீகாரம் தான் எங்களை அடுத்த
படத்திற்கு கொண்டு செல்லும் அதன் காரணமாகவே அப்படி சொன்னேன். 2டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்திருப்பதால், வாய்ப்புகள் தராமல் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள், உண்மையை சொன்னால் வாய்ப்பு தராமல் போனால் போகட்டும் என்றார். ஆனால் 2டி நிறுவனம் என்னுடைய குடும்பம் அதன் காரணமாகவே இதை சொன்னேன் என விளக்கமளித்தார்.

பின்னர் பேசிய சிங்கம் புலி, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அதிகமாக பேசிவிட்டோம். அங்கு சூர்யா, கார்த்தி என ரசிகர்கள் கத்திக்கொண்டே இருந்தனர். ஆரம்பத்தில் இருந்து விழாவாக உள்ளது. திரையில் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இந்த படம் உள்ளது. நிறைய மண் சார்ந்த படங்கள் முத்தையா வைத்துள்ளார் என்றார். மேலும் அதிதி தான் எங்களுடைய ஆலியா பட் தமிழின் ஆலியா பட் தான் அதிதி என அவர் தெரிவித்தார்.

 

இதையடுத்து பேசிய சாண்டி, முதல் முறையாக கார்த்தி உடன் இணைந்துள்ளதாகவும், நடிகை அதிதி சிறப்பாக நடனமாடி உள்ளார் என்றும் கூறினார். அவர் ஒரு சிறந்த டான்சர் என்றும் சாண்டி புகழாரம் சூட்டினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.