மனைவி பிரிந்த சோகத்தால் 21 பெண்களை கொலை செய்த கொடூர நபரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், ஹைதராபாத்தை சேர்ந்த மைனா ராமுலு என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் மீது ஏற்கனவே 16 கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகள் உள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தமது மனைவி பிரிந்து சென்ற பிறகு, ஆத்திரத்தில் தொடர் கொலைகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
பெண்களை ஏமாற்றி அவர்களின் வீட்டுக்கு செல்லும் மைனா ராமுலு, அவர்களுடன் மது அருந்திய பின் அவர்களை கொலை செய்து வந்தது தெரியவந்துள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். 2003ம் ஆண்டு முதல் அந்த நபர் 18 பெண்களை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







