மதுரை ஆவினில் எழுத்து தேர்வுக்கான சரியான விடைகளை (Key Answer) வெளியிட்ட பின்பே தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆவினில் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் (Key Answer)வெளியிடவும், எவ்வித முன்னறிவிப்பின்றி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததையும் ரத்து செய்ய கோரி மணிவண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில் நவம்பர் 22 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடந்தும் இன்னும் ஆன்சர் கீ வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்துத் தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிட வேண்டும் என்றும், அதன் பின்னர் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.







