29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் இந்தியா

ராகுல்காந்திக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு; மாணிக்கம் தாகூர் எம்.பி

ராகுல் காந்தியை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார். 

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டம் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரவுள்ள தேர்தல்களில் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என கூட்டத்தின் தொடக்கத்தில் சோனியா உறுப்பினர்களிடம் கேட்டு கொண்டதாக தெரிவித்த அவர், நவம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என மூத்த தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் தேர்தலின் போது இது குறித்து முடிவு செய்யலாம் என ராகுல்காந்தி தெரிவித்தாக செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

தேங்காய்களை இரு கால்களால் உறித்து முதியவர் அசத்தல்!

Jayapriya

பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்

Ezhilarasan

ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Nandhakumar