கேராளாவுக்கு ரெட் அலர்ட்; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து

கேராளாவின் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.  கேரளாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய…

கேராளாவின் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

கேரளாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் ஆலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகளுக்கு அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்ட கோட்டயம் மாவட்டத்தின் பூன்ஜர் பகுதியில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அதில் சிக்கிய பயணிகள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இதேபோன்று கோட்டயத்தில் மக்கள் முழங்கால் வரை ஓடும் தண்ணீரில் நடக்க முடியாமல் சிறமப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.