அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எங்களுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அது அவரவர் விருப்பம். எனக்கு கார் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன்.
தவெக அரசு 100 நாட்களில் ரூ.28,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது, வருவாய் செலவு மட்டும் ரூ.25,000 கோடி, இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். இந்த அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது; அப்படி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் ரூ.20 லட்சம் கோடி வரை இந்த அரசு கடன் வாங்கும்.
சட்டப்பேரவை கூட்டத்தொட 10 மணி நேரம் நடைபெறுவது பாராட்டுக்குறியதுதான். ஆனால் அதில் இரண்டரை மணிநேரம் மட்டுமே மக்கள் மிரச்னைகள் பேசப்படுகிறது, மீதமுள்ள ஏழரை மணிநேரமும் தேவையில்லாத பிரச்சனைகளை பேசி, அவையின் நேரத்தை வீணடிக்கிறது தவெக அரசு” என்றார்.




