முக்கியச் செய்திகள் இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு உறுதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுநர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. முன்னதாக இவர் உடல்நிலை குறித்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு சென்று மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது உறவினர்களிடமும், மருத்துவமனையிலும் கேட்டறிந்தார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மன்மோகன் சிங்கிற்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரின் உடல்நிலை சீராக இறுப்பதாகவும் தொடர்ந்து அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம்

Ezhilarasan

நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது

Vandhana

இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது யார்?

Saravana Kumar