முக்கியச் செய்திகள் இந்தியா

புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்

இந்தியாவின் புதிய அட்டார்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய அட்டார்னி ஜெனரலாக ஆர்.வெங்கடரமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவரை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
இவர் பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார்.

உச்சநீதிமன்றத்தின் மத்திய அரசு மூத்த வழக்கறிஞர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த வெங்கடரமணி, பெரும்பாலும் மறைமுக வரி தொடர்பான வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடியவர் ஆவார்.

இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். தமிழகம், ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளுக்கான சிறப்பு மூத்த வழக்கறிஞராகவும் வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

யார் இந்த வெங்கடரமணி?

புதுச்சேரியில் 1950ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிறந்த வெங்கடரமணி, 1977ம் ஆண்டு தமிழக வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு பெற்றார்.
1997ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞராக இவரை நியமித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்

Gayathri Venkatesan

கமல்ஹாசன் இடத்தில் மெட்ரோ ரயில் நிலையம்

Web Editor

மனிதனை ஆக்கிரமித்த செல்போன்

G SaravanaKumar