பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராகப் பார்க்கிறேன்-ஆளுநர் தமிழிசை புகழாரம்

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராக பார்க்கின்றேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புகழாரம் சூட்டினார். கிழக்கு தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில் செஸ்…

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராக பார்க்கின்றேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புகழாரம் சூட்டினார்.

கிழக்கு தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில் செஸ்
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை
சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், “மாணவர்கள் உயிரை மாய்த்துக்
கொள்ளுவதை எந்த காரணத்திலும் ஏற்று கொள்ள முடியாது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நான் சின்ன விவேகானந்தராக பார்க்கின்றேன். மாணவர்கள் பலவீனமாக இருப்பது பாவம் என விவேனந்தர் கூறி உள்ளார். நான் கவுடள் நம்பிக்கை உடையர், கடவுள் இல்லை என கூறுபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

ஆனால் கடவுள் இல்லை என்பவர்கள் கோயிலுக்கு பின் வழியாக சென்று அவர்களும் சாமி
கும்பிடுகின்றனர். பிரக்ஞானந்தா இளம் செஸ் வீரர், நான் இந்த நாட்டின் இளம் ஆளுநர்” என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

பிரக்ஞானந்தாவை போல செஸ் விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். செஸ் விளையாட்டு போட்டியில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் குழந்தைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

ஓடி விளையாடு பாப்பா என பாரதியார் சொல்லியது போல எப்படி படிப்பிற்கு
முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவு ஊற்றல் கலையை எப்படி பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறோமோ அதேபோல இன்றைக்கு பல சவால்களை சந்திக்கும் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளையும் பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பல இடங்களில் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நமது நாட்டின் மிகப்
பிரம்மாண்ட வரலாற்று கதைகள், செய்திகள் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. எனவே முந்தைய காலங்களில் எப்படி பள்ளிகளில் மாரல் கிளாஸ் என்று ஒரு வகுப்பு இருந்ததோ அதேபோல இப்போதும் இருக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.