செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!

செங்கோட்டையன் அவர்கள் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்Ru திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தது பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவுவதற்கான ஒரு சாட்சியம் என்ற வகையிலே இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்தி இருக்கிறார்.பெரும் மகிழ்ச்சியை தருகிறது. பெரியார் உலகமயமாகி வருகிறார். பகுத்தறிவு பகலவன் சாக்ரடீஸ் உலகம் முழுவதும் எப்படி போற்றப்படுகிறார்களோ அப்படி 20ம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் தோன்றிய மாமனிதர், புரட்சியாளர் தந்தை பெரியார் உலகம் தழுவிய அளவில் அனைவராலும் போற்றப்படுவார் என்பதற்கு ஒரு சான்றாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் .

செங்கோட்டையன் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது,
“செங்கோட்டையன் அதிமுக கட்சியை  ஒற்றுமைப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது.  செங்கோட்டையன் அவர்கள் எந்த பின்னணியில் இயங்குகிறார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் பொதுவாக பரவலாக இந்த பின்னணியும் பாஜகவின் கையில் இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
செங்கோட்டையன் அவர்கள் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. இப்போது கூட அவர் யார் யாரை சேர்க்க வேண்டும் என்பதை கூட வெளிப்படையாக சொல்லவில்லை . இதனால் எந்த தாக்கமும் ஏற்படாது.

திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டில் ஒரு அணி இன்னும் என்றும் உருவாகவில்லை. அதிமுகவில் இன்னும் முழுமையாக கட்சியாக உருப்பெறவில்லை. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை அவர்களால் வீழ்த்த முடியாது. அவர்கள் கூட்டணியில் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன் வெளியேறுகிறார், ஏற்கனவே இருந்த தேமுதிக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை, பாமக கருத்தும் இதுவரையில் சொல்லவில்லை ஆகவே என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வடிவம் பெறவில்லை.

ஜிஎஸ்டி வரிவிதத்தில் மாற்றம் குறித்து கேட்டதற்கு, அதனால் பெரிய அளவில் சிறு தொழில் வணிகர்கள், எளிய விளிம்பு நிலை மக்கள் பயன்பெறுவர் என்று சொல்ல முடியாது. 28% வரியை 40 சதவீதமாக உயர்த்திருக்கிறார்கள் என்கிற கடும் விமர்சனமும் எழுந்துள்ளது. ஆகவே இது அமெரிக்க அரசு நம் மீது விதித்திருக்கிற வரி தொடர்பான எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்கும் செய்யப்பட்டிருக்கிற ஒரு கண்துடைபதர்கான அறிவிப்பு என்றுதான் சொல்லப்படுகிறது” என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.