பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று காலை அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு செய்தார்.
இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டோப்கே இன்று காலை 9:30 மணியளவில் அயோத்தி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. உத்தரபிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி, எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து அவர் லக்னோ – கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோயிலை அடைந்தார். அயோத்தியில் உள்ள ராமர் கோயில், ஹனுமன்கர்ஹி மற்றும் பிற முக்கிய கோயில்களில் டோப்கே வழிபாடு செய்தார்.
இதனால் நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.







