சென்னை, தண்டையார் பேட்டையில் மகளிர் ஆணையம் சார்பில்
கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறை
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இணைந்து,
பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் கருத்தரங்கம்
நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் குமாரி தலைமையில்,
சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை கருத்தரங்கம்
நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆர்கே நகர், திருவெற்றியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக வடசென்னை மாவட்ட சமூக அலுவலர் ஹரிதா, சென்னை பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சி இயக்குனர், பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி, குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் வனிதா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாணவிகளுக்கும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து, ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினர். பின்னர், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இன்று உலகத்தை ஆட்டி படைக்கின்ற சைபர் கிரைம் குறித்தும், பெண்களுக்கு சோசியல் மீடியாவில் இருக்கின்ற பிரச்சனைகளை குறித்தும், எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். பெண்களுக்கான சட்டங்கள் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மகளிர்
ஆணையத்திற்கு சைபர் கிரைம் குறித்து அதிக புகார்கள் வருகின்றன. அவற்றையெல்லாம் முன்பு போல ஏதாவது காரணத்தைக் கூறி தட்டி கழிக்காமல், உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
மாணவிகள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக்-ல் டீபியில் படங்களை வைக்காதீர்கள். அதை எடுத்து மார்ஃபிங் பண்ணுகிறார்கள் என்று எச்சரித்தார். காதல் செய்வது அவர்கள் உரிமை, தகுந்த நபரை பார்த்து காதலிக்க வேண்டும். கல்லூரி மாணவிகளை விட, திருமணம் ஆன பெண்கள் கணவர் கூட பேசும்பொழுது ஆடியோ ரெக்கார்ட் பண்ணி வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார்கள். டெக்னாலஜி எவ்வளவு நன்மை செய்து இருக்கிறதோ, அதே அளவு தீமைகளும் செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
கு. பாலமுருகன்







