சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ”சைபர் அலார்ட்” என்னும் புதியசெயலி அறிமுகம்!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் “சைபர் அலாட்” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார். சென்னை சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள், தனியார்…

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் “சைபர் அலாட்” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார்.

சென்னை சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனத்துடன் இணைந்து சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை எளிதில் கண்டறிய சைபர் அலர்ட் என்னும் புதிய செயலியை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் இணையவழி குற்றங்களை கண்டறிய பயிற்சி பெற்ற குழுவினரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

குற்றங்களை இந்த செயலி மூலம் வகைப்படுத்தி குற்றவாளிகளின் தகவல்களோடு தொடர்பு படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். இதன் அடிப்படையில் ”சைபர் அலார்ட்” என்ற செயலியை வடிவமைத்துள்ளது.இந்த செயலியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

இந்த செயலி வழியாக சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் மொபைல் எண்கள், வங்கி கணக்குகள், சமூக வலைதள கணக்குகள், இ மெயில், வெப்சைட்கள் போன்றவற்றை காவல்துறையின் 20 பிரிவுகளால் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகள்
வழக்குகளுக்கு தொடர்புடையதாக இருப்பின் அந்த வழக்குகள் ஒருங்கிணைந்து, இந்த
செயலி மூலம் கண்டறிய முடியும்.

இதன் மூலம் பெருகி வரும் சைபர் குற்றங்களை வகைப்படுத்தி, குற்ற தரவுகளை ஒருங்கிணைப்பதிலும் இந்த செயலி முக்கியமான பங்காற்ற உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த ”சைபர் அலார்ட்” செயலியை கொண்டு சைபர்
குற்றவாளிகளை கைதுசெய்ய பயன் உள்ளதாகவும் இருக்கும்.முதல் கட்டமாக சென்னையில் பயன்படுத்திய பிறகு அடுத்த கட்டமாக இந்த செயலியை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.