பல்வேறு இனம், மொழி பேசும் மக்கள் உள்ள நாட்டில் பொது சிவில் சட்டம் சாத்தியமற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கும்பகோணம் சென்ற அவர், ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
“மணிப்பூர் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கியவர்களே பாஜகவினர் தான். மோடி நினைத்து இருந்தால் ராணுவத்தை வைத்து ஒரே நாளில் பிரச்னையை முடிவுக்கு
கொண்டு வந்திருக்கலாம்
மக்களை பிரித்தால் தான் வெற்றி பெற முடியும் என பாஜக நினைக்கிறது. அதுவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமும். மக்களை மதத்தால் ஜாதியால் பிரித்து ஆள வேண்டும் என்பதே அதன் நோக்கம். பல்வேறு மொழி, பல்வேறு இனம், பல் வேறு கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது ஏற்புடையது அல்ல” என கே.எஸ். அழகிரி கூறினார்.





