தமிழகத்தில் என்னைவிட தகுதியான தலைவருக்கு வாய்ப்பு இல்லை, பாவம் பார்த்தாவது எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என நாம் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடல்தீபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ராமதாஸ், திருமாவளவன், சரத்குமார், கார்த்திக் ஆகியோரது கட்சிகள் மீது குத்தப்பட்ட முத்திரை தன் மீது விழக்கூடாது என்பதற்காகவே சென்னையில் போட்டியிடுவதாக கூறினார். கடந்த தேர்தலில் வட மாவட்டமான கடலூரில் போட்டியிட்ட நிலையில், தற்போது சென்னையில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது நாட்டில் கல்வியும், உயிர்காக்கும் மருத்துவமும் வியாபாரமாகி இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், மேலும் விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள். உலகின் தலைச்சிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் தெரிவித்தார்.







