தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இன்று 945 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடித்து வந்தது. எனினும், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியதால்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடித்து வந்தது. எனினும், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியதால் ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாகத்தான் பொதுமக்கள் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக் துவங்கியுள்ளது.

தேர்தல் நேரத்தில் பாதிப்பு அதிகரிப்பதால் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதேபோல ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படாது என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,62,374 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,811 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 576 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,43,999 ஆக உள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கும், கோவையில் 107 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.