எனது வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி : சீமான்!

எனது வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.. சென்னை எண்ணூர் மீனவர் பகுதிகளில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளருமான…

எனது வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்..

சென்னை எண்ணூர் மீனவர் பகுதிகளில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளருமான சீமான், பரப்புரையில் ஈடுபட்டார் . பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, அனைத்து கல்வியும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், திருவொற்றியூரில் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும், ஆனால் தான் மக்களின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.