பாக்.வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு: யோகி எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு…

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் கடந்த 24 ஆம் தேதி மோதியது. இதில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணியின் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உட்பட பலர் பாராட்டினார்.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில், நீர்ஜா மோடி தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை நபீசா அட்டாரி என்பவர், பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையானதை அடுத்து அவரை பள்ளி நீர்வாகம் நீக்கியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இதே போல, உத்தரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதற்காகவும் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.