அரியலூர் இரும்புலிக்குறிச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்பவர்
இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது
அடையாளம் தெரியாத இரு நபர்கள் அருகில் வந்து கத்தியை காட்டி மிரட்டி
பாக்கெட்டில் இருந்த ரூ.1000/- பிடுங்கிக் கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து பசுபதி இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் தான் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.800/- பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் கடந்த ஜனவரி மாதம் இரும்புலிக்குறிச்சியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடியதும், இரு நாட்களுக்கு முன்னதாக மயிலாடுதுறை பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருடியதும் தெரியவந்துள்ளது.
மேலும் விஜயகுமார் மீது தஞ்சாவூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.இதனையடுத்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
—-ரூபி.காமராஜ்