சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த…

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராயபுரம் மண்டலத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 11 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படியே கட்டடங்களை கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள சென்னை மாநகராட்சி,

அண்மைச் செய்தி: மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்தால், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பல கட்டடங்களை, அதன் உரிமையாளர்கள் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.