சீனாவின் தெற்கு கடலியல் அராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 1900ம் ஆண்டு முதல் தற்போது வரை 150 மிமீ அளவுக்கு கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
சீன அறிவியல் அகாடமியின் கீழ் பணிபுரியும் அராய்ச்சியாளர்கள் மற்றும் கடலியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல்நீர் மட்டம் உயர்வு, பவளப்பாரைகள் நிலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டன. கடல்நீர் உப்பு தனமை, கடல் பகுதியின் வெப்பநிலை மற்றும் தெற்கு சீனாவின் மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து வருடாந்திர ஆய்வினை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த ஆராய்ச்சியின் மூலம், 1850ம் ஆண்டு முதல் 1900ம் வரை ஆண்டு ஒன்றுக்கு 0.77 மிமீ அளவுக்கு கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, 1900ம் ஆண்டு முதல் 2015ம் வரை ஆண்டு ஒன்றுக்கு 1.31 மிமீ அளவு கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 3.75 மிமீ உயர்ந்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த நீர் மட்டம் உயர்வு சீனாவைத் தாண்டி மற்ற அண்டை நாடுகளாலும் உற்றுநோக்கப்படுகிறது.







