தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவர் கைது – இருசக்கர வாகனம் பறிமுதல்!

தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவரை கைது செய்து, இருசக்கரவாகனத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை…

தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவரை கைது செய்து, இருசக்கரவாகனத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் கடல் குதிரை கடத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அதிகாரிகளை கண்டு தப்பிக்க முயன்றுள்ளார். அவரை மடக்கி பிடித்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 90 கடல் குதிரைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அதனை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட
தேவிபட்டினத்தைச் சேர்ந்த நாகநாதன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தெரித்த வனத்துறையினர், பெரும்பாலும் கடத்தப்படும் கடல்குதிரைகள் மற்றும் கடல் அட்டைகள் இலங்கைக்கு அனுப்பபடுவதாகவும், கடல் அட்டைகளை உண்பதால் ஆண்மை அதிகரிக்கும் என்பதை நம்பி கடல் உயிரினங்கள் அழிக்கப்படுவதாகவும் கூறினர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.