கோவையில் #BJP நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு…போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் பாஜக இளைஞரணி நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(28). இவர் ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.…

கோவையில் பாஜக இளைஞரணி நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(28). இவர் ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.
அது மட்டுமல்லாமல் பூ மார்க்கெட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து
வந்தார். இந்த சூழலில், சதீஷ்குமார் நேற்று இரவு அலுவலகத்தில் இருந்த போது, அலுவலகத்திற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் சதீஷ்குமாரை ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில், சதீஸ்குமாரின் கைகளின் இரண்டு மணிக்கட்டுகளிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆர்.எஸ்.புரத்தில் மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இதனையடுத்து சதீஷ்குமாரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.