சிறார் குற்றசெயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சிறார்களுக்கு எதிராக சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சிறார்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டது. அதில் சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் ‘சிற்பி’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், சேகர்பாபு, அதிகாரிகள் பனீந்தர ரெட்டி, காகர்லா உஷா, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர மேயர் ப்ரியா, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#LIVE: மாணவர்களை நல்வழிப்படுத்தும் #SIRPI (சிற்பி) திட்டத்தைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை https://t.co/UxyfnH8xOI
— M.K.Stalin (@mkstalin) September 14, 2022
சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் தலா 50 மாணவர்கள் சிற்பி திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்துறையுடன் இணைந்து, பள்ளி மாணவர்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சிற்பி திட்ட மாணவர்களுக்கு பிரத்யேக சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.
சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணுதல், பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு வழிகாட்டுதல், பள்ளிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் சிற்பி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.