முக்கியச் செய்திகள் இந்தியா

ராணுவ வீரர்களுக்கு ரக்‌ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்

இந்திய ராணுவ வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள மெஹாலி பள்ளி மாணவர்கள் ரக்‌ஷாபந்தன் விழாவிற்காக ராக்கி அனுப்பி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

ரக்‌ஷா பந்தன் என்பது ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் மீது சகோதரிகளின் அன்பை வெளிப்படுத்துவதற்காக இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். வட மாநிலங்களில் மட்டுமே அதிகம் கொண்டாடப்பட்டு வந்த ரக்‌ஷா பந்தன் இப்போது தென்னிந்தியாவிலும் பரவலான பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரி தனது சகோதரனின் கைகளில் கட்டும் ராக்கியே இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வருடம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்பட இருகின்றது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பஞ்ஞாப் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள மொகாலி பள்ளி மாணவர்கள் வீரர்களுக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து அட்டை வழங்கி போட்டோ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

சமூக அக்கறை கொண்டவரான ரின்கில் கபூர் என்பவர், ராணுவம் மற்றும் ராணுவ வீரர்களின் தியாகம் பற்றிய சமூக கருத்துக்களை கூறி இந்திய ராணுவ வீரர்களுடன் ரக்‌ஷாபந்தன் பண்டிகையை கொண்டாடினார். ராணுவ வீரர்களுக்காக பள்ளி மாணவர்கள் வாழ்த்து தெரிவித்த வீடியோவையும் அவர் ராணுவ வீரர்கள் முன் திரையிட்டார். பள்ளி மாணவர்களின் இந்த செயல் ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

லீ மெரிடியன் ஹோட்டல் சொத்துக்களை எம்ஜிஎம்க்கு மாற்ற தடை

G SaravanaKumar

புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு பதவி கேட்டு பாஜக அலுவலகம் முற்றுகை

Gayathri Venkatesan

தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

EZHILARASAN D