எஸ்பிஐ வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி ; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

எஸ்பிஐ வங்கி ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 7- ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிடங்கள் நிரப்படுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி,

பணியிடங்கள் :

  • நாடு முழுவதும் மொத்தம் 7,150 இடங்கள் நிரப்பபடுகின்றன. இதில் தமிழ் நாட்டில் மட்டும் 396 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

சம்பளம் :

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் வழங்கப்படும்.

கல்வித் தகுதி :

கல்வித் தகுதியை பொருத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

2026 ஏப்ரல் 01 நிலவரப்படி, வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை :

தேர்வு முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். பின்னர், உள்ளூர் மொழித் தேர்ச்சிச் சோதனையும் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ரூ. 300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை .

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க கடைசி தேதி, வரும் ஜூன் 8 ஆம் தேதி ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி…?

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிக்கு எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :

https://sbi.bank.in/documents/77530/57941334/19052026_ENGAGEMENT+OF+APPRENTICE+2026+ADVERTISEMENT+CRPD_APPR_2026-27_07.pdf/fa9015ff-2268-a829-f9e8-8c1b5d55e126?t=1779173730791

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.