லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங் தேர்வு; காயம் காரணமாக ரியான் பராக்கிற்கு ஓய்வு..!

லக்னோ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் தசைபிடிப்பு காரணமாக இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க வில்லை.

இதனை தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

ஜெய்பூரில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.