நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரியில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக தொடர்ந்து மூன்றாம் நாளாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அரசு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, என்.சி.சி. மற்றும் அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை: அதேபோல, கன மழை காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா